இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகப் பியூஷ் கோயல் தகவல்!

 
பியூஸ் கோயல்

  இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையில் இதுவரை இழுபறியாக இருந்த முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், விரைவில் இந்த ஒப்பந்தம் முழுமையடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

India-US trade deal nearing completion, says Piyush Goyal | India News - News9live

இந்திய இறக்குமதிகள் மீது கூடுதல் வரிகளை விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வரும் சூழலில், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. வரி விதிப்பு தொடர்பான கவலைகளைத் தனித்தனி நடவடிக்கைகளாக எடுக்காமல், வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

India-US trade deal is close to culmination: Goyal

இந்தியாவின் உற்பத்தித் துறை, விவசாயம் மற்றும் கடல் உணவு ஏற்றுமதியாளர்களுக்குச் சர்வதேசச் சந்தையில் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது