இன்று இந்தியா - பிரேசில் நேருக்கு நேர் மோதும் கால்பந்து போட்டி - முழு விவரம்

 
கால்பந்து பிரேசில்

இந்திய கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா - பிரேசில் அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்பு கால்பந்து போட்டி இன்று (அக்.3) நடைபெறுகிறது.கொல்கத்தாவில் உள்ள விவேகானந்த யுவ பாரதி கிரீடாங்கன் எனப்படும் சால்ட் லேக் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை முதலே ரசிகர்களின் கவனம் இந்த போட்டியின் மீது திரும்பியுள்ளது.

5 முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணிக்கு எதிராக இந்திய ஆண்கள் சீனியர் அணி முதல்முறையாக மோதுகிறது. இதனால் இந்திய கால்பந்து வரலாற்றில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், FIFA தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பிரேசிலை எதிர்கொள்வது, இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்தியா தற்போது 138-வது இடத்தில் உள்ளது.

பிரேசில் அணிக்கு கார்லோ அன்செலோட்டி பயிற்சியாளராக உள்ளார். அந்த அணியில் வினிசியஸ் ஜூனியர், ரபின்யா, எண்ட்ரிக் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணியை காலித் ஜமீல் வழிநடத்துகிறார்.இந்த போட்டியை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் தொலைக்காட்சி சேனல்களில் நேரடியாக பார்க்கலாம். ஆன்லைனில் Sony LIV தளத்திலும் போட்டி நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

India vs Brazil Football Match 2026: Date, Time, Venue, Squads, How To Book Tickets And More

கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டம், இந்திய அணிக்கு உலகின் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான பிரேசிலுக்கு எதிராக தங்களது திறமையை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

பிரேசில் அணிக்கும் இந்தப் போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2026 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு அணியை அடுத்த கட்டத்திற்கு தயார்படுத்தும் முயற்சியில் அன்செலோட்டி ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வீரர்களுக்கும் இந்த ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா - பிரேசில் அணிகள் மோதும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை காண கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.