கடைசி ஓவரில் இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி!
Oct 24, 2026, 16:40 IST
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டியில், இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் 70 ரன்களும், பெவோன் ஜேக்கப்ஸ் 58 ரன்களும் விளாசினர்.

181 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி, 112 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது கைகொடுத்த திலக் வர்மா 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். நிதிஷ் குமார் ரெட்டி 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து வெற்றிக்கு உதவினார். கடைசி ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி, தொடரில் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது.
