6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!
Oct 27, 2026, 16:20 IST
நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-0 என முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. டேரில் மிட்செல் 89 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
199 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணியில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
