பரப்பான சூழலில் நடப்பு சாம்பியனை எதிர்கொள்ளும் இந்தியா.. வெற்றி கணக்கை தொடருமா..?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த வருடம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. இங்கிலாந்து விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியனை எதிர் கொள்கிறது.
Hosts take on the defending champions 👊
— ICC (@ICC) October 29, 2023
Who takes home the points in Lucknow?#CWC23 | #INDvENG pic.twitter.com/Ntc6NHhWxO
இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல், சுப்மன் கில், பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த போட்டியிலும் விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில் இன்றை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்க வைக்கும்.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி 5 ஆட்டங்களில் வங்காளதேசத்துக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து கிட்டதட்ட அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது. எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுக்கு ஏற்ப குறைந்த வாய்ப்பே உள்ளது.