2036-ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் - பிரதமர் மோடி பெருமிதம்!
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சி குறித்த முக்கிய இலக்குகளைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியைப் பாராட்டிய அவர், வரும் 2030-ம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்த இந்தியா தற்போது தயாராகி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், உலக அரங்கில் இந்தியாவின் விளையாட்டுத் திறனை உயர்த்தும் வகையில், 2036-ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து முன்னெடுப்புகளிலும் நாடு வேகமாக முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் இளைஞர்கள் பெரிய அளவில் சிந்திக்கவும், புதிய இலக்குகளை நிர்ணயிக்கவும் இதுவே சரியான தருணம் என்றும் பிரதமர் மோடி தனது உரையில் ஊக்கமளித்தார்.
