9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி !

 
ஜிம்பாப்வே

 

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வதோதராவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 49.5 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் பிலவ்ட் பிசா 62 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் ஸ்ரீசரணி 4 விக்கெட்டுகளையும், கிராந்தி கவுட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

India vs Zimbabwe, 1st ODI: Rawal hits century, Shafali smashes 64 in dominant win - The Statesman

பின்னர் 198 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 27.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிரதிகா ராவல் 96 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் விளாசினார். ஷபாலி வர்மா 64 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது