காதல் திருமணம் செய்த மகளின் தாலியை அறுத்து, மொட்டை அடித்த பெற்றோர்... நெஞ்சை உலுக்கும் அராஜகம்!

 
ஆந்திரா ஆந்திரா

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்துகொண்ட தனது சொந்த மகளையே, அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து மிரட்டி கடத்திச் சென்று, தாலியை அறுத்து மொட்டை அடித்த கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பெண்ணின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் முறைப்படி தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டனர்.

ஆம்புலன்ஸ்

தங்களது எதிர்ப்பையும் மீறி மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர், ஆள் பலத்துடன் சென்று அந்தப் புதுமணத் தம்பதியைச் சூழ்ந்து கொண்டு மிரட்டியுள்ளனர். மாப்பிள்ளையை அடித்து விரட்டிவிட்டு, தங்களது மகளை வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு வைத்து, "எங்கள் சாதிப் பெருமையைக் கெடுத்துவிட்டாய்" எனக் கூறி, அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை (தாலி) பெற்றோர் தங்களது கைகளாலேயே அறுத்து எறிந்தனர்.

அதோடு கோபம் அடங்காமல், அந்தப் பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்து, ஒரு அறைக்குள் பூட்டி வைத்துச் சித்திரவதை செய்துள்ளனர்.இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் கணவர், உடனடியாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை மீட்டனர். மேலும், இந்த அராஜகத்தில் ஈடுபட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது கடத்தல், வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை  கைது செய்துள்ளனர்