பகீர்... குடும்பம் நடத்த அழைத்து வந்து மனைவியைக் கொன்று புதைத்த கணவன்!

 
karnataka

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பிரிந்து வாழ்ந்த மனைவியைச் சேர்த்து குடும்பம் நடத்துவதாகக் கூறி அழைத்து வந்து கொடூரமாகக் கொலை செய்த கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மற்றும் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில மாதங்களாகத் தனியாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மனைவியிடம் நயவஞ்சகமாகப் பேசி, இனி பழைய குறைகளை மறந்து மீண்டும் ஒன்றாகச் சேர்ந்து வாழலாம் என ஆசை வார்த்தை கூறி அழைத்துள்ளார். கணவனின் பொய்யான பேச்சை உண்மை என நம்பிய மனைவியும் அவருடன் குடும்பம் நடத்த மீண்டும் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

ஆம்புலன்ஸ்

வீட்டிற்கு அழைத்து வந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் தீவிரமடைந்துள்ளது. ஆத்திரமடைந்த கணவன் நள்ளிரவில் மனைவியைக் கொடூரமாகத் தாக்கிப் படுகொலை செய்து சடலத்தை வீட்டின் அருகிலேயே மறைமுகமாகப் புதைத்துள்ளார். மகள் மாயமானது குறித்துச் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரணை நடத்தக் கோரினர். காவல் துறையினர் கணவனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியதில் மனைவியைக் கொலை செய்து புதைத்த உண்மையை ஒப்புக்கொண்டார்.

டெல்லி போலீஸ்

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புதைக்கப்பட்ட சடலத்தைக் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கில் கணவனைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடும்பம் நடத்த அழைத்து வந்து மனைவியைக் கொடூரமாகக் கொன்று புதைத்த இந்த நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.