சர்ச்சை... கிளாஸ்கோ உணவக நாப்கின்களில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம்... பிரபல குத்துச்சண்டை வீராங்கனை கடும் கண்டனம்!
தற்போது நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியக் குழுவினர் வெற்றிகரமாகப் பங்கேற்றதைத் தொடர்ந்து, அந்த உணவகம் சமீபத்தில் அவர்களுக்கு இரவு விருந்து அளித்தது.மிஸ்டர் சிங்ஸ் இந்தியா - தி ஹோம் ஆஃப் கறி என்ற உணவகத்தின் நாப்கின்களில் இருந்த வரைபடத்தில் வடகிழக்குப் பகுதி இடம்பெறவில்லை என்று லவ்லினா சுட்டிக்காட்டினார்."நாப்கின்களில் உள்ள வரைபடத்தில் நமது வடகிழக்குப் பகுதி விடுபட்டுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானது, அது பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும்," என்று லவ்லினா கூறியதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது.
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது கிளாஸ்கோவில் உள்ள ஒரு உணவகத்தில் விவகாரம் ஏற்பட்டுள்ளது. அங்கு பயன்படுத்தப்பட்ட நாப்கின்களில் முழுமையற்ற இந்திய வரைபடம் அச்சிடப்பட்டிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வரைபடத்துடன் குத்துச்சண்டை வீரர் லவ்லினா போர்ஹோகேன் பெயரும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் (BFI) தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மையைக் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள இந்த வரைபடக் குறைபாடு குறித்து உடனடியாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. சர்வதேச நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் இதுபோன்ற தவறுகள் ஏற்படுவது கண்டிக்கத்தக்கது என்று நெட்டிசன்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு வீரர்களின் பெயர்களை இதுபோன்ற சர்ச்சைகளில் பயன்படுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட உணவக நிர்வாகம் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இது குறித்து விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், கவன ஈர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
