6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியது இந்தியா - சீனா எல்லை வர்த்தகம்!

 
இந்தியா - சீனா

கோவிட் பெருந்தொற்று மற்றும் கல்வான் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்தியா - சீனா எல்லை வர்த்தகம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

சிக்கிம்: நாதுலா கணவாய், இமாச்சலப் பிரதேசத்தில்  ஷிப்கி லா கணவாய் ஆகிய எல்லைப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய வர்த்தகப் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன:

எல்லை வர்த்தகத்தின் கீழ் கைவினைப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மொத்தம் 36 அத்தியாவசியப் பொருட்களை இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லை வர்த்தகச் செயல்பாடுகள் அனைத்தும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் நடைபெற்று வருகின்றன.

கடந்த 6 ஆண்டுகளாக வர்த்தகம் இன்றிப் பாதிக்கப்பட்டிருந்த எல்லைப் பகுதி மக்களுக்கு, இந்த வர்த்தகத்தின் மீள் தொடக்கம் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.