மைனஸ் 10 டிகிரி குளிரில் மரக்கட்டைபோல் உறைந்த ராணுவ வீரரின் சீருடை... வைரலாகும் வீடியோ!
மைனஸ் டிகிரி குளிரில் எல்லைப் பகுதிகளில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில், பனிப்பொழிவு நிலவும் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவர் தனது சீருடையைக் காட்டுகிறார். அவர் துவைத்து காயவைத்திருந்த சீருடை, மைனஸ் 10 டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையில் உறைந்து, மரக்கட்டைபோல் கடினமாக மாறியுள்ளது.
சீருடையை அசைக்கவோ, வளைக்கவோ முடியாத அளவுக்கு அது உறைந்திருப்பதை அந்த வீரர் வீடியோவில் விளக்குகிறார். மேலும், “ராணுவத்தில் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறார்கள் என்று பலர் பேசுகிறார்கள்; ஆனால் இந்தச் சீருடையின் நிலையைப் பாருங்கள்” என்று அவர் கூறுகிறார்.
பனிமலைப் பகுதிகளில் துணிகளைத் துவைத்து காயவைப்பதற்குக்கூட எவ்வளவு சிரமம் உள்ளது என்பதை இந்த வீடியோ வெளிப்படுத்தியுள்ளது. எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வீரர்கள் எதிர்கொள்ளும் கடுமையான இயற்கைச் சூழல் குறித்தும் இந்தக் காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது
