காமன்வெல்த் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பிரீதி பவார்!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான குத்துச்சண்டைப் பிரிவில் இந்தியாவின் பிரீதி பவார் அபார வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் மகளிருக்கான 54 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பிரீதி பவார் களமிறங்கினார். போட்டியின் ஆரம்பம் முதலே தனது சுறுசுறுப்பான மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர், எதிரணி வீராங்கனையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இந்தச் சிறப்பான வெற்றியின் மூலம், காமன்வெல்த் தொடரின் மகளிர் 54 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் காலிறுதிச் சுற்றிற்கு பிரீதி பவார் கம்பீரமாக முன்னேறியுள்ளார்.
காமன்வெல்த் தொடரில் ஆண்கள் மற்றும் மகளிர் குத்துச்சண்டைப் பிரிவுகளில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து காலிறுதிக்கு முன்னேறி வருவதால், குத்துச்சண்டையில் இந்தியாவிற்கு மேலும் பல பதக்கங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
