நீச்சல் குளத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் மர்ம மரணம்... அமெரிக்காவில் அதிர்ச்சி!

 
அமெரிக்கா ஐதராபாத் இளம்பெண் நீச்சல்குளத்தில் மரணம் அமெரிக்கா ஐதராபாத் இளம்பெண் நீச்சல்குளத்தில் மரணம்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஸ்ரீவீணா (28), அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் தனது கணவருடன் வசித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு திருமணமான இவர், தோழியின் திருமணத்தில் பங்கேற்பதற்காகப் புளோரிடா சென்றிருந்த போது அங்குள்ள ஒரு நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மீட்புக் குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடல் நீர் மூழ்கி தண்ணீர் மரணம்

தனது மகளுக்கு மிக நன்றாக நீச்சல் தெரியும் என்பதால், அவர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை என ஸ்ரீவீணாவின் பெற்றோர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர். இந்தத் திடீர் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு திருமண விழாவிற்குச் சென்ற இடத்தில் இளம் பெண் பொறியாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல்

தகவல் அறிந்த எல்.பி.நகர் சட்டமன்ற உறுப்பினர், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்துத் தனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்தார். ஸ்ரீவீணாவின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசி வருவதாகவும், விரைவில் உடல் ஐதராபாத் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.