சவுதி அரேபியாவில் 2வது முறையாக தாக்குதல் - இந்தியர் பலி... பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

 
சவுதி ஹவுதி

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட இந்த இரண்டாவது ஏவுகணைத் தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தில், இந்தியாவின் ஹைதராபாத் மேதிபட்டினத்தைச் சேர்ந்த முகமது யூசுப் அலி என்பவர் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சவுதி

இத்தாக்குதலின்போது அவருடன் இருந்த அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு உறவினரும் காயமடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சனிக்கிழமை நடைபெற்ற முதல் கட்டத் தாக்குதலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இத்தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.