அமெரிக்காவில் இந்தியருக்கு 10 ஆண்டுகள் சிறை... 15 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை!

 
அமெரிக்கா பாலியல் அமெரிக்கா பாலியல்

அமெரிக்காவில் 15 வயது சிறுமியைக் கடத்தி, அவருக்குக் கொடூரமான முறையில் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய வாலிபர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கவன்குமார் என்ற வாலிபர், அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் உள்ள ஒமஹா நகரில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் தங்கிப் பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அந்தப் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய மைனர் சிறுமி ஒருவரை கவன்குமார் ஆசை வார்த்தைகளைக் கூறி, திட்டமிட்டுத் தனது கட்டுப்பாட்டிற்குள் கடத்திச் சென்றுள்ளார்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

கடத்திச் செல்லப்பட்ட அந்தச் சிறுமிக்கு, அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே வைத்துத் தொடர்ந்து பலமுறை கடுமையான பாலியல் தொந்தரவுகளை கொடுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அமெரிக்காவின் ஒமஹா நகரப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி கவன்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்:

அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை தற்பொழுது முழு வீச்சில் நடைபெற்றது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநலம், பாதுகாப்பு மற்றும் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மிகவும் ரகசியமான முறையிலும் துரிதமாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

பாலியல்

சிறுமியைக் கடத்தியதற்கான ஆதாரங்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், கவன்குமார் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து, மைனர் சிறுமிக்கு எதிரான இந்த கொடூரக் குற்றத்திற்காகக் கவன்குமாருக்கு 10 ஆண்டுகள் கடுமையான சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர் அமெரிக்காவில் இருந்து நிரந்தரமாக நாடுகடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.