நாகூர் தர்கா ஜொலித்த இந்திய தேசிய கொடி... களைக்கட்டிய குடியரசு தின கொண்டாட்டம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 400 ஆண்டுகால பழமையான பாரம்பரியமிக்க தஞ்சாவூர் மகாராஜாவால் கட்டித் தரப்பட்ட நாகூர் நாகூர் தர்காவில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாகூர் தர்கா பெரிய மினரா முழுவதும் தேசிய கொடி வண்ணத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு ஜொலித்தது. அதை போலவே நாகூர் ஆண்டவர் சமாதியின் நேர் மேல் உள்ள தங்க கலசமும் இந்திய தேசிய கொடியின் நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
நாகூர் தர்கா அலங்கார வாசலில் அமைந்துள்ள நாகூர் தர்கா அலுவலகம் முன்பு வழக்கம் போல் இந்திய அரசின் கொடி ஏற்றப்பட்டு கொடிக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இஸ்லாமிய முறைப்படி புனித பாத்தியா ஓதி பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. நாகூர் தர்காவில் உள்துறை காவலாளிகள் உள்ளிட்ட நாகூர் தர்கா நிர்வாகிகள் வீரக்கொடி வணக்கம் செலுத்தினர். பின்னர் அங்கிருந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!