வைரல் வீடியோ!! புர்ஜ் கலீஃபாவில் இந்திய தேசிய கொடி!!

 
புர்ஜ் கலீபா

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, 828 மீட்டர் உயரம் கொண்டது. புர்ஜ் கலிஃபாவை கட்டும் பணி 2004-ம் ஆண்டில் தொடங்கி, 2010-ம் ஆண்டில் நிறைவுபெற்றது. துபாயில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் 160 மாடிகள் உள்ளன. இக்கட்டிடத்தின் 122-வது மாடியில் ஓட்டல் அமைந்துள்ளது.இந்நிலையில், இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தை யொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா, இந்தியாவின் மூவர்ணக் கொடியில் ஜொலித்தது. இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பின்னணியில் இசைக்கப்படுவதால், உலகின் மிக உயரமான கட்டிடம் இந்திய தேசிய கொடியால் ஒளிர்கிறது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


 

முன்னதாக துபாயில் பாகிஸ்தானி மக்கள் சலசலப்பை ஏற்படுத்திய ஒரு நாளுக்கு பிறகு இந்த வீடியோ வைரலாகி வருகிறது. புர்ஜ் கலிஃபாவில் பாகிஸ்தான் கொடி காட்டப்படாததால், நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியர்கள் கோபமடைந்தனர். இதுதொடர்பான வீடியோ நேற்று வைரலானது. நள்ளிரவில் புர்ஜ் கலிஃபாவிற்கு அருகில் தங்கள் தேசியக் கொடியின் வண்ணங்கள் ஒளிரும் என்று எதிர்ப்பார்த்து, பாகிஸ்தான் நாட்டு மக்கள் பெரும் கூட்டமாக காத்திருப்பதை வீடியோ காட்டுகிறது.

இதற்கிடையில், இந்தியாவின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். நாட்டு மக்களை குடும்ப உறுப்பினர்கள் என்று அழைத்து பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். ஊழல், குடும்ப ஆட்சி, சமாதான கொள்கை ஆகியவை இந்தியாவுக்கு முக்கிய தடைகள் என்றும் இந்த மூன்று தீமைகளுக்கு எதிராக முழு சக்தியுடன் போராட வேண்டும் என்றும் கூறினார்.

புர்ஜ் கலீபா

மேலும் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை நாட்டை மாற்றும் தாரக மந்திரங்கள். 2014ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, உலகப் பொருளாதார அமைப்பில் இந்தியா 10வது இடத்தில் இருந்தது. இன்று, 140 கோடி இந்தியர்களின் முயற்சியால், 5வது இடத்திற்கு வந்துவிட்டோம், ஊழல் என்ற அரக்கனை நாட்டை விட்டு வெளியேற்றி, வலுவான பொருளாதாரத்தை உருவாக்கினோம். பாரம்பரிய திறன் கொண்டவர்களுக்கு அடுத்த மாதத்தில் 13,000 முதல் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா திட்டத்தை அரசாங்கம் தொடங்கும். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, அது வளர்ந்த நாடாக மாறும் என்று நான் நம்புகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web