இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். சக்யாத்ரி கூட்டுப் பயிற்சிக்காக ரஷ்யா சென்றடைந்தது!

 
இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். சக்யாத்ரி

இந்தியா மற்றும் ரஷிய கடற்படைகளின் கூட்டுப் பயிற்சியான ‘இந்த்ரா-2026’-ல் பங்கேற்பதற்காகச் சென்றுள்ள இந்தியாவின் அதிநவீன போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ். சக்யாத்ரி' ரஷியாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது.

விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கு வருகை தந்த இந்தியக் கப்பலுக்கும் அதன் வீரர்களுக்கும் ரஷியக் கடற்படை தரப்பில் பாரம்பரிய வழக்கப்படி ரொட்டி மற்றும் உப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எதிரிகளின் ரேடார் கருவிகளில் எளிதில் சிக்காத வகையிலான அதிநவீன கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல் இப்பயிற்சியில் முக்கியப் பங்காற்றவுள்ளது.

ரஷியத் துறைமுகத்தில் முறையான வரவேற்பைப் பெற்றுள்ள இந்தக் கப்பல், வரும் அக்டோபர் 13-ஆம் தேதி முதல் ஜப்பான் கடற்பகுதியில் நடைபெறவுள்ள கூட்டுப் போர் பயிற்சியில் அதிகாரப்பூர்வமாக ஈடுபடவுள்ளது.