கடல்சார் உளவுப் பணியில் 50 ஆண்டுகள் நிறைவு! இந்திய கடற்படையின் பொன்விழா சாதனை
இந்திய கடற்படையின் நீண்டதூர கடல்சார் உளவு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, கடற்படை பொன்விழாவைக் கொண்டாடியுள்ளது.
1971-ம் ஆண்டு போருக்குப் பிறகு, போர்க்கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய நீண்டதூர கடல்சார் ரோந்து விமானங்களின் தேவை உணரப்பட்டது. இதையடுத்து, 1976-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா தளத்தில் 'ஆல்பட்ராஸ்' எனப்படும் ஐஎன்ஏஎஸ் 312 விமானப் படைப்பிரிவு தொடங்கப்பட்டது. அப்போது இந்திய விமானப்படையிடமிருந்து பெறப்பட்ட 5 லாக்ஹீட் சூப்பர் கான்ஸ்டலேஷன் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் 1977-ல் இல்யூஷின் ஐஎல்-38, 1988-ல் டுபோலேவ் டியு-142எம் விமானங்கள் இணைக்கப்பட்டன. 2013-ல் அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி தளத்தில் போயிங் பி-8ஐ விமானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த விமானங்கள் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிதல், கடல்சார் கண்காணிப்பு, உளவுப் பணி, மீட்புப் பணிகள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய ராணுவ நடவடிக்கைகளிலும் பங்களித்துள்ளன
