நடுக்கடலில் திக் திக்... 35 கடற்கொள்ளையர்களை கைது செய்தது இந்திய கப்பற்படை!

 
mv ruen

நிலத்தில் தான் பிரச்சனை என்றால், ஆசிய நாடுகளுக்கு கடற்கொள்ளையர்களால் நடுக்கடலிலும் பிரச்சனைகள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், நடுக்கடலில் அட்டகாசம் செய்து வந்த 35 சோமாலியா கடற்கொள்ளையர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். அரபிக் கடற்பகுதியில் கப்பல்கள், மனிதர்கள் கடத்தல் போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. சோமாலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள எம்.வி. ரூயன் என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. இதை மறித்த கடற்கொள்ளையர்கள் கப்பலை கடத்த முயன்றனர். ஆனால், இந்த முயற்சியை இந்திய கடற்படை முறியடித்தது.

 


 

இதில் பல்கேரியா, அங்கோலா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். 30க்கும் மேற்பட்ட கடற்கொள்ளையர்கள் இந்தக் கப்பலுக்குள் புகுந்து, இந்தக் கப்பலைப் பயன்படுத்தி பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டனர். 

இந்திய கடற்படையின் விரைவான தாக்குதலில் அனைத்து கடற்கொள்ளையர்களும் சரணடைந்தனர். இதில், 35 கடற்கொள்ளையர்களையும், 17 பணியாளர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, இந்திய கடற்படை கப்பலுக்கு வீரர்கள் அழைத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து 35 கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் கொல்கத்தா கப்பலுக்கு கொண்டு வரப்பட்டு மும்பை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web