பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய கடற்படை அதிகாரி கோவையில் கைது!

 
போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவாளிக்கு நாட்டின் முக்கிய ராணுவத் தகவல்களைப் பகிர்ந்து வந்த இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் கோவையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஐஎன்எஸ் அக்ரனி கடற்படை மையத்தில் நடைபெற்று வரும் சிறப்புப் பயிற்சியில் பங்கேற்பதற்காகப் பிரதீப் முகர்ஜி என்ற கடற்படை அதிகாரி கடந்த ஒரு வாரமாக அங்கு தங்கியிருந்தார். அந்த அதிகாரியைச் சமூக வலைதளங்கள் வழியாகத் தொடர்பு கொண்ட பாகிஸ்தானியப் பெண் உளவாளி ஒருவர், காதலிப்பது போல் நடித்து அவரிடமிருந்து ராணுவ ரகசியங்களைக் கறந்துள்ளார்.

குறிப்பாக, விசாகப்பட்டினம் கடற்படைத் தளம் தொடர்பான மிக முக்கியமான மற்றும் ரகசியமான தகவல்களைப் பிரதீப் முகர்ஜி அந்தப் பெண்ணுடன் பகிர்ந்துள்ளார். இந்த உளவு வேலை குறித்துத் தகவல் அறிந்த ஆந்திர மாநிலத்தின் சிஐடி சிறப்புக் குழுவினர் உடனடியாகக் கோவை விரைந்து, அங்குத் தங்கியிருந்த பிரதீப் முகர்ஜியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.