இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 வங்கி அலுவர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 250 லோக்கல் பேங்க் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியின் பெயர்: லோக்கல் பேங்க் ஆபிசர்
மொத்த காலியிடங்கள்: 250
தமிழகத்திற்கான இடங்கள்: 100 பணியிடங்கள் (தமிழ் மொழி அறிவு கட்டாயம்)
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).
சம்பளம்: ஆரம்ப அடிப்படைச் சம்பளம் மாதம் ₹48,480 முதல் ₹85,920 வரை கிடைக்கும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 24, 2026
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் iob.bank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
