இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் தகுதி நீக்கம்... ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்!

 
பாட்மிட்டன்
 

இந்திய பாரா பாட்மிண்டன் வீரர் பிரமோத் பகத், ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால், ஊக்க மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறிய காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. பிரமோத் பகத், பாராலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பாட்மிட்டன்

2025 செப்டம்பர் 1ம் தேதி வரை சுமார் 18 மாத காலம் பிரமோத் பகத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 28ம் தேதி பாரிஸில் தொடங்கவுள்ள பாராலிம்பிக் போட்டியில் பிரமோத் பகத் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார். இன்று காலை உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு பிரமோத் பகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரையில் 11 நாட்கள் பாரிஸில் பாராலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. பாராலிம்பிக் போட்டியில் கடந்த முறையை போலவே இந்த முறையும் இந்தியா முத்திரை பதிக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வரும் நிலையில் பிரமோத் பகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் பிரமோத் பகத் பெற்றிருந்த தங்கப்பதக்கம் உட்பட இந்தியா 19 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ பாராலிம்பிக்கில் எஸ்எல்3 பிரிவில் தங்கம் வென்றிருந்த பிரமோத் பகத், உலக சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் போன்ற போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா