செம... இனி பார்சல் அனுப்ப ரயில்வே ஸ்டேஷன் போக தேவையில்ல... வீடு தேடி வந்து பார்சல் கலெக்‌ஷன்.... !

 
ரயில் பார்சல்

 

ரயில் மூலம் பார்சல் அனுப்ப விரும்புவோர் இனி ரயில் நிலையத்திற்குச் சென்று முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லாத வகையில், இந்திய ரயில்வே புதிய வீட்டுக்கு வந்து பார்சல் சேகரிக்கும் சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

'கர் சே கர் தக்' (Ghar Se Ghar Tak) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம், சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், ஐதராபாத், பெங்களூரு, புனே ஆகிய 8 நகரங்களில் முதற்கட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது.

ரயில்வே பார்சல் மேனேஜ்மென்ட் சிஸ்டம் மொத்த மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது - நவீன ஆலயங்கள் வெளியீடுகள்

இதற்காக உருவாக்கப்படும் 'ரெயில் பார்சல்' செயலி அல்லது இணையதளம் மூலம் வீட்டிலிருந்தே முன்பதிவு செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன்பிலிருந்து, ஒரு நாள் முன்பு வரை முன்பதிவு செய்ய அனுமதி அளிக்கப்படும்.

முன்பதிவு செய்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பார்சல்களைச் சேகரிப்பது, சேர வேண்டிய இடத்தில் உரிய முகவரிக்கு விநியோகிப்பது ஆகிய பணிகளைத் தனியார் தளவாட நிறுவனங்கள் மேற்கொள்ளும். நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்தை ரயில்வே கவனித்துக் கொள்ளும்.'

இரயில்வே பார்சல் சேவையைப் பயன்படுத்தி பொருட்களை அனுப்புதல் - பகுதி I - வாழ்க்கை - { freemindscafe }

ஒவ்வொரு முன்பதிவுக்கும் 10 இலக்க அடையாள எண் வழங்கப்படும். அதன் மூலம் பார்சலின் இருப்பிடத்தை இணையத்தில் கண்காணிக்கலாம். விநியோகத்தின்போது ஓடிபி சரிபார்ப்பும் மேற்கொள்ளப்படும்.

இந்தச் சேவைக்கான செயலி மற்றும் தொழில்நுட்பப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளதால், விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.