ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்தது இந்திய கப்பல்: 15-ம் தேதி மும்பை வருகை - தடையை உடைத்த ‘ஜக் விக்ரம்’!!

 
ஹார்முஸ் கப்பல் ஹார்முஸ் கப்பல்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாக நிலவி வந்த போர்ச் சூழல், தற்போது எட்டப்பட்டுள்ள இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தால் சற்றே தணிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, உலக நாடுகளின் எரிசக்திப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கியுள்ளது.

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த ஆபத்தான கடல் வழித்தடத்தை வெற்றிகரமாகக் கடந்த முதல் இந்தியக் கப்பல் என்ற பெருமையை 'ஜக் விக்ரம்' பெற்றுள்ளது. இந்தியக் கொடியுடன் பயணிக்கும் இந்த எல்பிஜி சரக்குக் கப்பல், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து ஓமான் வளைகுடா வழியாக இந்தியாவை நோக்கிப் பயணிக்கிறது.

கப்பல் நிவாரண பொருட்கள் இலங்கை

அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, இந்தக் கப்பல் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் மும்பை துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் மற்றும் ஓமான் நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் மூன்றில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படுகிறது. போர் காரணமாக இந்த வழித்தடம் மூடப்பட்டிருந்ததால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் விலையில் தாக்கம் ஏற்படும் என அஞ்சப்பட்டது.

ஹார்முஸ்  கப்பல்

தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியக் கடற்படை இந்தப் பிராந்தியத்தைக் கண்காணித்து வருகிறது. ஜக் விக்ரம் கப்பல் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவது இந்திய எரிசக்தித் துறைக்கு ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், ஹார்முஸ் ஜலசந்தி நிரந்தரமாகத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.