அசத்தல்... 70 அடி பாலத்தை 72 மணி நேரத்தில் கட்டி முடித்த இந்திய ராணுவ வீரர்கள்!

 
ராணுவம்
 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சிக்கிமில் வரலாறு காணாத மழை பெய்து பல இடங்களில் தனி தீவு போல காட்சியளித்தது. சுமார் 1600 சுற்றுலா பயணிகள் இந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். செல்போன் சிக்னல்கள் முடங்கி, மின்சாரம் தடைபட்டு, சாலைகள் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமங்களை அனுபவித்து வந்தனர். 


இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சிக்கம் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் இன்ஜினியர்கள் 70 அடி நீளம் கொண்ட பெய்லி பாலத்தை 72 மணிநேரத்தில் கட்டி முடித்துள்ளனர். இந்நிலையில், சிக்கிமில், மங்கன், சோங்கு மற்றும் சுங்தாங் ஆகிய பகுதிகளை இணைக்கும் டீஸ்டா ஆற்றின் மீது புதிதாக கட்டப்பட்ட பெய்லி பாலம் இந்த மழை வெள்ளத்தில் இடிந்து அந்த பகுதியில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இந்தியா இராணுவம் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகளை தொடங்கியது. இதையடுத்து, காங்டாக்கின் திக்சு சங்க்லாங் சாலையில் 70 அடி பெய்லி பாலத்தைச் சரியாக 72 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளனர் இந்திய ராணுவத்தினர்.

ராணுவம்

பாலத்தை முழுவதுமாக கட்டி முடித்ததோடு மட்டுமல்லாமல் கனமழையால் பாதிப்படைந்த எல்லைக் கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்கள். இந்த பாலம் உடனடியாக கட்டி முடிக்கப்பட்டதால் வெள்ளத்தில் தவித்த மாங்கன் மாவட்ட மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ உதவிகளுளையும், அடிப்படைத் தேவைகளையும் வழங்க முடிந்தது. இந்த மாவட்டத்திற்கு செல்ல வேறு பாதைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாவட்ட மக்கள் நெகிழ்ச்சியுடன் இந்திய ராணுவத்திற்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

From around the web