இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ல் தொடங்கும்: பிசிசிஜ தகவல்!

 
இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ல் தொடங்கும்: பிசிசிஜ தகவல்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ல் தொடங்கும்: பிசிசிஜ தகவல்!

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு, அங்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் பரவி வருவதால் இருநாடுகளுக்குமிடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்திருந்தது. மேலும் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளுக்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் டிசம்பர் 26-ல் தொடங்கும்: பிசிசிஜ தகவல்!

இந்நிலையில் தற்போது பிசிசிஐ புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘டிசம்பர் 17-ஆம் தேதி நடக்கவிருந்த போட்டிகள், டிசம்பர் 26-ஆம் தேதி தொடங்கும். ஒருநாள் போட்டிகள் நடைபெறும். டி-20 போட்டிகள் மட்டும் ஒத்திவைக்கபடுகிறது’ என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web