ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி ... தீபாவளிக்கு முன் பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்!

 
pangu

 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட அதிரடி ஏற்றம் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி ஆகிய இரு குறியீடுகளும் நவம்பர் 5-ம் தேதி வலுவான ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 79,310 புள்ளிகளிலும், நிஃப்டி 24,536 புள்ளிகளிலும் நிறைவடைந்தன.

 Stock Market Today: Sensex Soars Nearly 1,500 Points & Nifty Jumps 430 Points, Here Are 5 Reasons Behind The Massive Rally

இதன் காரணமாக ஒரே நாளில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடி அதிகரித்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த ஏற்றத்திற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு, இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்யத் தொடங்கியது ஆகியவை முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

Dalal Street Rallies Ahead Of Diwali: Sensex Soars Nearly 1,400 Points, Nifty Crosses 24,300

மேலும், சர்வதேச அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளன. தொடர்ந்து சில நாட்களாக ஏற்றம் கண்டு வரும் இந்தியப் பங்குச்சந்தை, தீபாவளிக்கு முன்பாக முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது