ரக்ஷா பந்தனுக்காக திங்கட்கிழமை இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை... முதலீட்டாளர்கள் குழப்பம்?!
இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு கடந்த நாட்டின் 78வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக ஆகஸ்ட் 15ம் தேதியன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 15ம் தேதி விடுமுறையையடுத்து நேற்று ஆகஸ்ட் 16ம் தேதி பங்கு சந்தை வர்த்தகம் நடைபெற்றது.
இன்று ஆகஸ்ட் 17 சனிக்கிழமை, நாளை ஆகஸ்ட் 18ம் தேதி ஞாயிறு பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு வார விடுமுறை என்பதால் இந்த இருதினங்களிலும் வர்த்தகம் நடைபெறாது.
இந்நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதி திங்கட்கிழமை ரக்ஷா பந்தன் தினத்தையடுத்து இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு விடுமுறையா என்கிற குழப்பம் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ளது. ரக்ஷா பந்தன் தினத்தன்று தலால் ஸ்ட்ரீட் மீண்டும் திறக்கப்படுமா என சந்தை முதலீட்டாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பங்குச் சந்தை ஆர்வலர்கள், திங்கள்கிழமை பங்குச் சந்தை விடுமுறையா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்திக் கொள்ள பிஎஸ்இ அல்லது என்எஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த மாதத்தில் பங்குச்சந்தை வர்த்தகம் ஆகஸ்ட் 15 ஒரு நாள் மட்டுமே விடுமுறை என அறிவித்துள்ளது. அதனால், திங்கட்கிழமை வழக்கம் போல் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெறூம்.
இதன் பின்னர் அடுத்த வர்த்தக விடுமுறை அக்டோபர் 2ம் தேதி வருகிறது. நடப்பு ஆண்டில் இன்னும் நான்கு பங்குச் சந்தை விடுமுறை நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அந்த நான்கு வர்த்தக விடுமுறைகள் 2 அக்டோபர் 2024 (காந்தி ஜெயந்தி), 1 நவம்பர் 2024 (தீபாவளி/லக்ஷ்மி பூஜை), 15 நவம்பர் 2024 (குரு நானக் ஜெயந்தி) மற்றும் 25 டிசம்பர் 2024 (கிறிஸ்துமஸ்).
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
