தொடரும் சோகம்... அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை!

ஹைதராபாத்தில் ஆர்கே புரம் பகுதியில் வசித்து வருபவர் ரவி தேஜா. 26 வயதாகும் இவர் தனது மேல் படிப்புக்காக 2022 ம் ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். தனது படிப்பை முடித்தவுடன் அங்கேயே வேலை தேடிக் கொண்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரிலுள்ள எரிவாயு நிலையத்தில் வைத்து மாணவர் ரவி தேஜா மர்ம நபர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த செய்தி கேள்விப்பட்டதும் அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாணவரின் தந்தை சந்திரமௌலி, "என்னால் பேச முடியவில்லை. எந்தத் தந்தையாலும் இதனைத் தாங்க முடியாது. யாருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது" என வேதனையுடன் கூறினார்.
இந்தக் கொலை சம்பவம் குறித்து பதிலளித்த சிகாகோவில் உள்ள இந்தியத் தூதரகம், "இந்திய மாணவர் சாய் தேஜாவின் கொலை அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் ஏற்படுத்தியது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியத் தூதரகமும், வெளியுறவு அமைச்சகமும் வழங்கும்" எனக் கூறியுள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க