சிறுவனின் கண் இமைக்கு மேலே வளர்ந்த பல்! மருத்துவர்களையே வியக்க வைத்த அரிய நிகழ்வு

 
பல்

 

இந்தியாவைச் சேர்ந்த 16 வயது சிறுவனின் இடது கண்ணுக்கு மேலே பல் வளர்ந்திருப்பது மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கண் இமைக்கும் புருவத்திற்கும் இடையில் வலியில்லாத வீக்கம் ஏற்பட்ட நிலையில், பின்னர் தோலில் இரண்டு கடினமான வெள்ளை முனைகள் வெளியே தெரியத் தொடங்கின.

இதையடுத்து சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் மேற்கொண்டனர். அதில், கண் குழியின் மேல் பகுதியில் பல் உருவாகியிருப்பது தெரியவந்தது. வாயில் வளர வேண்டிய பல் வேறொரு இடத்தில் உருவாகும் இந்த அரிய நிலை, மருத்துவ ரீதியாக ‘எக்டோபிக் டூத்’ (Ectopic tooth) எனப்படுகிறது.

Boy, 16, stuns doctors with TOOTH growing out of his eye socket - in first case of bizarre condition

மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்தப் பல்லை வெற்றிகரமாக அகற்றினர். இதுபோன்று கண் குழியின் மேல் பகுதியில் பல் வளர்ந்ததாக இதுவரை பதிவான முதல் நிகழ்வு இது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பல் அந்த இடத்தில் உருவானதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.