இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை நிலைய பாடகர் காலமானார்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைமை நிலையப் பாடகரும், புகழ்பெற்ற இஸ்லாமியச் சமுதாயப் பாடகருமான முகவை எஸ்.ஏ. சீனிமுகம்மது இன்று காலமானார்.
"இந்தியா எங்கள் தாய்நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு", "மருதநாயகம்" உள்ளிட்ட ஏராளமான எழுச்சிமிக்க சமுதாயப் பாடல்களைப் பாடி, தமிழ் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் அறிமுகத்தையும் பெற்றவர்.
ஐயூஎம்எல் கட்சியின் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் இவரது பாடல்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. இவரது மறை செய்தி கேட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முகவை சீனிமுகம்மதுவின் உடல் இன்று மாலை ராமநாதபுரம் பெரிய முஹல்லம் பள்ளிவாசல் மயானப் பகுதியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த பாடகர் சீனிமுகம்மதுவிற்கு மனைவி, 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
