காதலை ஏற்க மறுத்த இந்தியப் பெண் சுட்டுக் கொலை - அமெரிக்காவில் கொலையாளியும் தற்கொலை!
அமெரிக்காவில் இந்தியப் பெண் ஒருவர் ஒருதலைக் காதலை ஏற்க மறுத்த காரணத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணம் சேக்ரமெண்டோ பகுதியில் உணவகப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தவர் ஷாலினி (38). இவரை ரோகித் (22) என்பவர் ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார்.
ஷாலினி தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ரோகித், உணவகத்தின் வாசலில் வைத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஷாலினியைச் சுட்டுக் கொன்றுவிட்டு காரில் தப்பியோடியுள்ளார்.

தப்பியோடிய ரோகித்தை காவல்துறையினர் தீவிரமாகத் துரத்தினர். போலீசாரிடம் சிக்கிய அவர், காரிலேயே தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அமெரிக்கக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
