வியட்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் பலி.. பிரதமர் மோடி இரங்கல்!

 
வியட்நாம்

வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே, இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பயணித்த விசைப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது வேதனையையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

க்ஃப்க்

வியட்நாம் கடற்பரப்பில் நிகழ்ந்த இந்தக் கோரப் பேரிடர் குறித்துப் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வியட்நாமில் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்த விசைப்படகு எதிர்பாராத விதமாகக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான சுற்றுலாப் படகு விபத்தில் சிக்கித் தங்களது உயிர்களை இழந்துள்ள ஒட்டுமொத்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

க்ஃப்க்

இந்தக் கோர விபத்தில், தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியைச் சேர்ந்த பிரபல செல்போன் விநியோகஸ்தரான முருகபிரபு (44) என்ற தொழிலதிபர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்துப் படகில் பயணித்த மேலும் 17 இந்தியச் சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 18 பேர் இந்த விபத்தில் பலியாகியிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலில் மூழ்கிய எஞ்சிய பயணிகளை மீட்க வியட்நாம் அதிகாரிகள் தீவிரத் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.