இந்தியாவில் தேங்காய் ஏற்றுமதி 62% உயர்வு - ரூ.7,038 கோடியை எட்டி சாதனை!
Sep 1, 2026, 21:15 IST
கடந்த நிதியாண்டில் இந்தியாவில் இருந்து தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் 62 சதவீதம் அதிகரித்து, ஒட்டுமொத்தமாக ரூ. 7,038 கோடியை எட்டியுள்ளதாகத் தென்னை வளர்ச்சி வாரியம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதும் இந்த மகத்தான வளர்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

தேங்காய் ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் சுமார் 67 சதவீதப் பங்களிப்புடன், தேங்காய் சிரட்டைக்கரி ஏற்றுமதி மட்டும் ரூ.4,688.89 கோடியை எட்டித் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
