ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் தங்கம் ! மீராபாய் சானு?!

 
ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் தங்கம் !   மீராபாய் சானு?!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடைபெறும் 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்பட 205 நாடுகள் மற்றும் அகதிகள் அணி ஆகியவற்றை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்த விளையாட்டு திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் தங்கம் !   மீராபாய் சானு?!

இந்தியா சார்பில் பளு தூக்குதல் – பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ள மீராபாய் சானுவிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து மீராபாய் சானுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுக்காக ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக திருமதி மிராபாய் சானு வாழ்த்துக்கள். எங்கள் முழு நாட்டையும் சக விளையாட்டு வீரர்களையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். என்று மாநிலங்களவை, நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நலவாழ்வுத்துறை முன்னாள் அமைச்சர். அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை; வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web