200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் தீ விபத்து!

 
இண்டிகோ

டெல்லியிலிருந்து சென்னை நோக்கி 200-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னைக்குச் பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட இண்டிகோ விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரெனச் சிறிய தீ விபத்து ஏற்பட்டு, விமானத்தின் உள்ளே புகை பரவியது. இதனால் பயணிகள் அனைவரும் கடும் அச்சமடைந்தனர்.

இண்டிகோ

உடனடியாக விமானப் பணியாளர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு விமானம் உடனடியாகத் திசை திருப்பப்பட்டு, ஹைதராபாத் விமான நிலையத்தில் பத்திரமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.