சவுதி அரேபியாவுக்கு இண்டிகோ விமானங்கள் ரத்து! அக்டோபர் 17 வரை சேவை நிறுத்தம்

 
இண்டிகோ விமானம் திருச்சி

 

 

ஈரான்-சவுதி அரேபியா இடையிலான போர் பதற்றம் காரணமாக, சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ரியாத், ஜெட்டா, தம்மாம், மதீனா ஆகிய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களும், அங்கிருந்து புறப்படும் விமானங்களும் அக்டோபர் 17-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பாதிப்பு

இந்த அறிவிப்பால் சவுதி அரேபியாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த பயணிகளும், அங்கிருந்து இந்தியா திரும்பவிருந்த பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வேலை, குடும்பத் தேவைகள் மற்றும் பிற காரணங்களுக்காகப் பயணம் மேற்கொள்ளவிருந்தவர்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

IndiGo Cancels Flights to Saudi Arabia Amid Houthi Strikes | The CSR Journal

விமானப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது விமானத்தின் தற்போதைய நிலை குறித்து இண்டிகோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். விமான ரத்து மற்றும் மாற்று ஏற்பாடுகள் தொடர்பான அறிவிப்புகளையும் தொடர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.