நடுவானில் தீப்பிடித்த இண்டிகோ விமானம்... சென்னைக்குப் பதில் ஹைதராபாத்தில் அவசரத் தரையிறக்கம்!

 
இண்டிகோ

டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரெனத் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னைக்குச் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நிலைமையை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தைத் திருப்பிய நிலையில், அது ஹைதராபாத் விமான நிலையத்தில் பத்திரமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

க்க்

விமானத்தில் பயணித்த அனைத்துப் பயணிகளும் எவ்விதக் காயமுமின்றி முழுப் பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இதுபோன்ற விமானப் பாதுகாப்புச் சம்பவங்கள் குறித்துத் தீவிர விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.