ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் விபத்து - பயணிகள் பத்திரமாக மீட்பு!
Sep 4, 2026, 11:40 IST
மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது சிறிய விபத்தில் சிக்கியுள்ளது.
மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் (6E 225) இன்று காலை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கி, நிறுத்துமிடத்தை நோக்கி டாக்ஸிங் செய்தபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கம்பத்தில் மோதியது.

இந்த மோதலில் விமானத்தின் முன்பகுதி லேசாகச் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணம் செய்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதால், தற்காலிகமாக விமான சேவை அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.
