இந்தோனேசியா தங்கச்சுரங்கத்தில் வெள்ளம்: 29 பேர் பலி என அச்சம்!

 
இந்தோனேஷியா

 

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம் போகொர் பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச்சுரங்கத்தில் வெள்ளம் புகுந்ததில் 29 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்தச் சுரங்கத்தில் நேற்று முன்தினம் 29 பேர் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பெய்த கனமழையால் மலைப்பகுதியில் ஓடும் சிசிருவா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளநீர் தங்கச்சுரங்கத்திற்குள் புகுந்ததில், பணியில் இருந்த 29 பேரும் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

Illegal Gold Mine Flooding in Indonesia; Miners Trapped in Bogor | Rescue

தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 29 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சத்திற்கு மத்தியில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.