இந்தோனேசியா நிலச்சரிவு | பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு.. தொடரும் மீட்பு பணிகள்!

 
ஜாவா நிலச்சரிவு

இந்தோனேசியா நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது, 13 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜாவா தீவு

மேற்கு ஜாவா மாகாணத்தின் பெக்கலோங்கன் பகுதியில் உள்ள ஒன்பது கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக, தொடர் மழையால் மலை கிராமங்களில் நிலச்சரிவுகள், பாறைகள் மற்றும் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன, இதனால் பல கிராமங்களில் ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன எட்டு பேரை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

நிலச்சரிவில் இருந்து தப்பிய 11 பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மாதம், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தின் சுகபூமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளத்தில் 12 பேர் இறந்தனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web