இந்தோனேசியாவில் கோர ரயில் விபத்து: ஆளில்லா கடவையில் மினி பஸ் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் பலி - பதைபதைக்கும் காட்சிகள்!

 
இந்தோனேஷியா

 

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கடவை ஒன்றில், தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மினி பஸ் ஒன்று, அவ்வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. ரயில் மோதிய வேகத்தில் மினி பஸ் தூக்கி வீசப்பட்டு உடனடியாகத் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

இந்த கோர விபத்தில், மினி பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் தீயில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பஸ்ஸில் இருந்த பலர் பலத்த தீக்காயங்களுடன் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்தைத் தொடர்ந்து மினி பஸ் தீப்பற்றி எரியும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இந்த விபத்து குறித்து இந்தோனேசிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்