உட்கட்சி பூசல்... மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜகவில் இருந்து விலகல்!

 
பாஜக

தமிழக காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல் போல பாஜகவிலும் தொடர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நிர்வாகிகள்  கூண்டோடு பதவி விலகுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு பாஜவில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக உட்கட்சி பூசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதலில் மாநில அளவில் இருந்து வந்த, உட்கட்சி பூசல் அரசியல், தற்போது மாவட்டம், நகரம் என அடிமட்ட தொண்டர்கள் நிர்வாகிகள் வரை சென்றுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பாஜவில் புதிய மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. இதில் மாவட்ட தலைவர்கள் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் மாவட்ட பாஜ தலைவர் தயாசங்கர், பொதுச்செயலாளர் வேல்ஆறுமுகம் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். திருநெல்வேலியை தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்ட பாஜவிலும் அதிருப்தி குரல் எழுந்துள்ளது. வேலூர் மாவட்ட பாஜ தலைவர் பதவிக்கான போட்டியில் 3 பேர் களத்தில் இறங்கினர். இதில் ஏற்கனவே 2 முறை மாவட்ட பாஜ தலைவர் பதவி வகித்த, தசரதன் என்பவர் மீண்டும் மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாக  காலையே செய்திகள் வெளியாகி உள்ளூர் பாஜவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. 

Image

இந்த நிலையில் மேற்கண்ட நபர் மாவட்ட பாஜ தலைவராக நியமிக்கப்படுவது உறுதி என்ற தகவல் வெளியான நிலையில், தற்போது மாவட்ட தலைவர் பொறுப்பில் உள்ள மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எல்.பாபு, எம்.ஜெகநாதன், சி.மகேஷ்குமார், மாவட்ட பொருளாளர் என்.தீபக் ஆகிய 5 பேர் மாவட்ட தலைவர் நியமனத்தில் தங்களுக்கும், கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களுக்கும் முழுமையான உடன்பாடு இல்லை.

ஏற்கனவே 2 முறை பொறுப்பில் இருந்த அவர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக நடந்து கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தவர். அவரை மீண்டும் தலைவராக நியமிப்பதில் உடன்பாடு இல்லாததால் தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிக் ெகாள்வதாக அறிவித்து, அதற்கான கடிதத்தை மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் தரப்பில் கேட்டபோது, ‘கட்சியில் இருந்து முழுமையாக விலகவில்லை. எங்கள் அதிருப்தியை கட்சி தலைமையிடம் பதிவு செய்துள்ளோம். கட்சிக்காக உழைக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் பொறுப்புக்கு வரலாம். கட்சிக்கு குந்தகம் விளைவித்து, வளர்ச்சிக்கு தடையாக தனது பொறுப்பு காலத்தில் செயல்பட்டவரை எப்படி ஏற்பது? எங்களுடைய குரலுக்கு கட்சி செவிசாய்க்கும் என்று நம்புகிறோம்.

முழுமையான பட்டியல் வெளியான பிறகு எங்களின் நிலையை அறிவிப்போம்’ என்றனர். வேலூர் மாவட்ட பாஜக நிர்வாகிகளின் இந்த அறிவிப்பு வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருவதால், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட பாஜவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web