சிறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கைதி.. அலட்சியமாக செயல்பட்ட 4 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

 
யேசுதாஸ்

கோவை மத்திய சிறையில் நேற்று ஆயுள் தண்டனை கைதி ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தார், மேலும் பணியில் அலட்சியமாக இருந்ததற்காக நான்கு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான யேசுதாஸ் என்பவர் கோவை மத்திய சிறைத் தொகுதி 7 இல் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார்.  

இவர் 2016 ஆம் ஆண்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு நேற்று சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், மர்மமான முறையில் நேற்று இறந்து கிடந்தார்.  இதைத் தொடர்ந்து, சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், விசாரணையில் அவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

இந்நிலையில், சம்பவம் நடந்த நாளில் கோவை மத்திய சிறையில் பணியில் இருந்த துணை சிறை அதிகாரி மனோரஞ்சிதம், உதவி சிறை அதிகாரி விஜயராஜ், முதல் தலைமைக் காவலர் பாபுராஜ், முதல் வகுப்பு காவலர் தினேஷ் ஆகிய நான்கு பேரை சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web