மத்திய தரைக்கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் திரிசூல் போர்க்கப்பல் கிரீஸ் துறைமுகம் அடைந்தது!
மத்திய தரைக்கடல் பகுதியில் நீண்டதூரப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் திரிசூல், கிரீஸ் நாட்டின் சௌடா விரிகுடா துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது. இந்தியா - கிரீஸ் இடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 31-ம் தேதி கிரீஸின் சௌடா விரிகுடாவை அடைந்த ஐஎன்எஸ் திரிசூல் கப்பல், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறது. கிரீஸ் கடற்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஏதென்ஸில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் கப்பல் குழுவினர் கலந்துரையாட உள்ளனர்.
மேலும், இரு நாட்டுக் கடற்படையினரிடையே தொழில்முறை விவாதங்கள், கப்பல்களுக்கு இடையிலான பரஸ்பரப் பார்வையிடல் மற்றும் கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சௌடா விரிகுடாவில் உள்ள கடற்படை ஆதரவு மையம் மற்றும் நேட்டோவின் கடல்சார் தடுப்பு நடவடிக்கை பயிற்சி மையத்தின் செயல்பாடுகளையும் இந்தியக் குழுவினர் அறிந்துகொள்ள உள்ளனர்.
Indian Naval Ship INS Trishul arrived at Souda Bay, #Greece, on October 31, 2026, as part of its ongoing operational deployment to the Mediterranean Sea. During the port call, the ship’s crew will take part in a series of activities aimed at strengthening maritime cooperation between the Indian Navy and the Hellenic Navy. @indiannavy @vishal_baristo #INSTrishul #IndianNavy
— DD India (@DDIndialive) November 1, 2026
இதுதவிர, சௌடா விரிகுடா போர் நினைவிடத்தில் இந்தியக் கடற்படை வீரர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். துறைமுகப் பயணத்தின்போது பொதுமக்கள் பார்வைக்காகவும் கப்பல் திறந்து வைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்தப் பயணம் இந்தியா - கிரீஸ் கடற்படைகளுக்கு இடையிலான தொழில்முறை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
