இன்ஸ்டா பிரபலம் நிஷா ரஃபேல் மீது போக்சோ வழக்குப்பதிவு - 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்!

 
இன்ஸ்டா பிரபலம் நிஷா ரஃபேல் பாலியல் சிறுவன்

கேரள மாநிலம் திருச்சூரில் 11 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சமூக வலைதளப் பிரபலமான நிஷா ரஃபேல் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவின் திருச்சூர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 11 வயது சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக இன்ஸ்டா பிரபலம் நிஷா ரஃபேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவன்

பாதிக்கப்பட்ட சிறுவன் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டான். அந்தப் பரிசோதனை முடிவுகளில் சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, நிஷா ரஃபேலுக்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளன. இரண்டு பிளாட்கள் தொடர்பாக நிஷாவுக்கும் புகார்தாரருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சொத்துத் தகராறு நிலவி வருவதாகவும், அந்த முன்விரோதம் காரணமாகவே திட்டமிட்டு இந்தப் போலி வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்துத் திருச்சூர் மேற்கு காவல் நிலையக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.