இன்ஸ்டா காதல்... கல்லூரி மாணவியின் அந்தரங்கப் படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்ட காதலன்!

 
நிர்வாணம் நிர்வாணமாக

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணுடன் பழகி, அவரது அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாலிபரைச் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு மாணவிக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விராலிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுப் பின்னர் காதலாக மாறியுள்ளது.

அரை நிர்வாணம்

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வாடிப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டிற்கு அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்ற மணிகண்டன், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துப் பாலியல் உறவு வைத்துள்ளார். மேலும், அந்த சம்பவத்தை இளம்பெண்ணிற்குத் தெரியாமல் ரகசியமாக வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் பதிவு செய்து வைத்துள்ளார். பேசுவதைத் தவிர்த்த மாணவி: நாளடைவில் மணிகண்டனின் தவறான நடத்தைக் காரணமாக அவருடன் பேசுவதையும் பழகுவதையும் அம்மாணவி தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், தான் ரகசியமாக எடுத்து வைத்திருந்த இளம்பெண்ணின் அந்தரங்கப் படங்களை இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்து பழிவாங்கியுள்ளார்.

ஆபாச வீடியோ செல்போன்

அந்தரங்கப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்துச் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மணிகண்டனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அகற்றும் நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.