புற்றுநோயுடன் போராடிய இன்ஸ்டாகிராம் பிரபலம் ராஜஸ்ரீ ஜெய்சன் காலமானார் !

 
insta

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தும் மனம் தளராமல் துணிச்சலுடன் போராடி வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ராஜஸ்ரீ ஜெய்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு சமூக வலைதளங்களில் அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Rajashree Jaison (@rajashree_jaison) • Instagram photos and videos

புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்ரீ, தனது உடல்நிலை மற்றும் வாழ்க்கை அனுபவங்களை சமூக வலைதளங்கள் வாயிலாகப் பகிர்ந்து வந்தார். நோயின் கடினமான சூழலிலும் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இழக்காமல் இருப்பது எப்படி என்பதை தனது வீடியோக்கள் மூலம் எடுத்துரைத்தார்.

வாழ்க்கையில் எத்தகைய சவால்கள் வந்தாலும் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த அவரது பதிவுகள் பலருக்கும் ஊக்கமளித்தன. இதனால் அவருக்கு ஏராளமானோர் பின்தொடர்பவர்களாக இருந்தனர்.

⚠️Old video but useful... 🤔Think different, which can save ur life ❤️‍🩹, Im sharing my experience in my cancer story. Each of them have their own experience. May be mine can help some one... , 2nd ...

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி வெளியானது. இதையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடினமான காலத்திலும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற செய்தியைப் பகிர்ந்து வந்த ராஜஸ்ரீயின் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.